Categories
அரசியல்

கீழே விழுந்தாலும்…. மீசையில் மண் ஒட்டாத மாறியே பேசுறாங்க…. எஸ்.ஆர் சேகர்…!!!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்களில் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களும் வழிபட தடை விதிக்கப்பட்டிருந்தது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் பாஜக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் இந்த மக்கள் விரோத செயல் என்றும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்.  இந்த நிலையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபட தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது. இவ்வாறு வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் வழிபாட்டு தலங்களை திறப்பதற்கான தடையை தமிழக அரசு நீக்கியது பாஜகவின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று பாஜகவினர் சொல்கின்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தமிழகஅரசு யாருடைய அழுத்தத்துக்கும் அடிபணிந்து கோவிலை திறக்கவில்லை. மக்களின் கோரிக்கையை ஏற்று வார இறுதி நாட்களில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது பாஜக அழுத்தம் கொடுத்ததன் காரணமாக கோவில்கள் திறக்கப்படுகிறது என்று கூற முடியாது என்று கூறினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக எஸ்.ஆர் சேகர், “அரசு கோவிலை விட்டு வெளியேற வேண்டும் என்பது மக்களுடைய கோரிக்கையாக இருக்கிறது. இதை இந்த விடியல் அரசு நிறைவேற்றுமா? கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று பேசி பொய்யை நம்ப வைக்க முயற்சிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |