கீழே கிடந்த ரூ. 10 ஆயிரத்தை போலீசாரிடம் ஒப்படைத்த மாணவிகளுக்கு காவல் துறையினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
சென்னை பெரம்பூர் வீனஸ் மார்க்கெட் அருகே அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவி பவித்ரா, வாணி, சங்கரேஸ்வரி ஆகியோர் பள்ளி முடிந்ததும் மார்க்கெட் பகுதி வழியாக நடந்து சென்றனர். அப்போது சாலையில் கிடந்த பிளாஸ்டிக் கவரை எடுத்து பார்த்த போது 10 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது.
பிறகு மாணவிகள் இந்த கவரை பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினர். பின்னர் அவர் பணத்தைச் செம்பியம் குற்றப்பிரிவு போலிஸாரிடம் ஒப்படைத்தார். இதனை அறிந்த காவல் ஆய்வாளர் கோமதி பள்ளிக்குச் சென்று மாணவிகளை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். மேலும் மாணவிகளுக்கு ரூபாய் 500 கொடுத்து கௌரவித்தார்.