1 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பாச்சல் லட்சுமி நகரில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 1 வயதுடைய மோனிகா என்ற பேத்தி இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு அருகே விளையாடிக்கொண்டிருந்த குழந்தை கீழே கிடந்த ஏதோ ஒரு பொருளை எடுத்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மயங்கி விழுந்த குழந்தையை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி நேற்று குழந்தை பரிதாபமாக இறந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.