Categories
சினிமா தமிழ் சினிமா

கீர்த்தி பாண்டியனின் ‘கண்ணகி’… வித்தியாசமான பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…!!!

கீர்த்தி பாண்டியன் நடிக்கும் கண்ணகி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் கீர்த்தி பாண்டியன் ‘தும்பா’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் ஆவார். இதையடுத்து இயக்குனர் கோகுல் இயக்கத்தில் வெளியான அன்பிற்கினியாள் படத்தில் அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கீர்த்தி பாண்டியன் அடுத்ததாக நடிக்கும் கண்ணகி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தொப்புள் கொடியில் நெருப்பு வைப்பது போன்று இருக்கும் இந்த வித்தியாசமான பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஷாலினி இயக்கியுள்ள இந்த படத்தில் அம்மு அபிராமி, வித்யா பிரதீப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .

Categories

Tech |