‘ரங் தே’ படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் சிவகார்த்திகேயன், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் போன்ற பல டாப் நடிகர்களின் படங்களில் நடித்து அசத்தியுள்ளார். தற்போது இவர் சாணிக் காயிதம், அண்ணாத்த ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் ரங் தே, குட் லக் சகி, சர்க்காரு வாரி பட்டா ஆகிய தெலுங்கு படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
When a fake punch turns into a real one 🥊🙄@actor_nithiin #RangDe #RangDeBTS #RangDeOn26thMarch🌈 pic.twitter.com/bJZHKQxl9z
— Keerthy Suresh (@KeerthyOfficial) March 23, 2021
இதில் நிதினுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘ரங் தே’ படம் வருகிற மார்ச் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது . இந்தப் படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வீடியோ ஒன்றை நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகர் நிதின் படப்பிடிப்பின் போது கீர்த்தி முகத்தில் குத்திய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.