Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சாணிக்காகிதம்…. “தேசிய விருதே கொடுக்கலாம்”…. பாராட்டி வரும் ரசிகர்கள்…!!!!

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள சாணிக்காகிதம் திரைப்படத்துக்கு தேசிய விருது தரவேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றார்கள்.

தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் கீர்த்தி சுரேஷ். இவர் தற்பொழுது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணிக் காகிதம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் பிரபல இயக்குனரான செல்வராகவன் முதல் முதலாக நடித்து இருக்கின்றார். இத்திரைப்படத்தின் படபிடிப்பானது சென்ற 2020ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் நேற்று இரவு அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

இப்படமானது 1979இல் நடப்பதுபோல் படமாக்கப்பட்டுள்ளது. பரதேசிபட்டினம் என்ற ஊரில் ரைஸ் மில் முதலாளி தன்னை மேல் ஜாதியாக நினைத்து தவறாகப் பேசியதால் அங்கு வேலை செய்யும் வேறு ஜாதியைச் சேர்ந்த ஒருவர் தட்டி கேட்கின்றார். இதையடுத்து பிரச்சனை ஏற்பட்டு அவருக்கு வேலை போகிறது. பின் மீண்டும் மன்னிப்பு கேட்டு வேலையில் சேர முயலும் போது மனைவியை பற்றி தவறாக பேசி முதலாளிகள் கூட்டத்தை அவமதித்து விட்டுச் செல்கிறார்.

இதற்கு பழி வாங்குவதற்காக போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கும் தொழிலாளியின் மனைவி பூமியை சாதிவெறிக் கும்பல் கொடூரமாக தாக்கி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்கிறது. பின் பொன்னியின் கணவர் மற்றும் அவரின் பெண் குழந்தை வீட்டுக்குள் இருக்கும் பொழுது குடிசைக்கு தீ வைத்து எரித்து விடுகிறார்கள். இதையடுத்து பொன்னி தனது குடும்பத்தை அழித்து தன்னையும் நாசம் செய்த கும்பலை எப்படி பழிவாங்குகிறார் என்பதே சாணிக் காகிதம். படத்தில் கீர்த்தி சுரேஷும் செல்வராகவனும் தனது நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

கீர்த்தி சுரேஷ் அசுரத்தனமாக தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ரசிகர்கள் தற்போது கீர்த்தி சுரேஷை கொண்டாடி வருகின்றார்கள். இதுபோன்ற நடிப்பை இதுவரை எந்த நடிகையும் வெளிப்படுத்தி இருக்க மாட்டார்கள் என கீர்த்தி சுரேசை பாராட்டி வருகிறார்கள். மீண்டும் ஒரு தேசிய விருதை இத்திரைப்படத்துக்கான கீர்த்தி சுரேஷுக்கு தரலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றார்கள். மேலும் இயக்குனரை பாராட்டி வருகின்றனர். செல்வராகவனும் வெறித்தனமாக நடித்திருப்பதாக பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

Categories

Tech |