கீர்த்தி சுரேஷ், டொவினோ தாமஸ் இணைந்து நடிக்கும் வாஷி படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் செல்வராகவனுடன் இணைந்து நடித்துள்ள சாணிக் காயிதம் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இவர் தெலுங்கில் சர்காரு வாரி பாட்டா, போலா ஷங்கர் போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் கீர்த்தி சுரேஷ் மோகன்லாலுடன் இணைந்து நடித்துள்ள மரக்கார் அரபிக் கடலின்டே சிம்ஹம் படம் வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. இதுதவிர கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள குட் லக் சகி படம் டிசம்பர் 10-ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.
Ending the month with a new beginning and new journey. #Vaashi 🎬@ttovino @vishnugraghav @RevathySureshK #GSureshKumar #MaheshNarayan @sandipsenan #NitinMichael #KailasMenon #VinayakSasikumar #AnuMohan #DivyaGeorge #AnaghaaNarayanan pic.twitter.com/xtKKlds7jN
— Keerthy Suresh (@KeerthyOfficial) November 28, 2021
சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் வாஷி என்ற மலையாள படத்தில் டொவினோ தாமஸுடன் இணைந்து நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. விஷ்ணு.ஜி.ராகவ் எழுதி இயக்கும் இந்த படத்திற்கு கைலாஷ் மேனன் இசையமைக்கிறார். இந்நிலையில் வாஷி படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.