Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் நடிப்பில் “சாணிக்காகிதம்”…. படம் எப்படி இருக்கு தெரியுமா…???

கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் நடிப்பில் சாணிக் \காகிதம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் கீர்த்தி சுரேஷ். இவர் தற்பொழுது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணிக் காகிதம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் பிரபல இயக்குனரான செல்வராகவன் முதல் முதலாக நடித்து இருக்கின்றார். இத்திரைப்படத்தின் படபிடிப்பானது சென்ற 2020ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் நேற்று இரவு அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

இப்படமானது 1979இல் நடப்பதுபோல் படமாக்கப்பட்டுள்ளது. பரதேசிபட்டினம் என்ற ஊரில் ரைஸ் மில் முதலாளி தன்னை மேல் ஜாதியாக நினைத்து தவறாகப் பேசியதால் அங்கு வேலை செய்யும் வேறு ஜாதியைச் சேர்ந்த ஒருவர் தட்டி கேட்கின்றார். இதையடுத்து பிரச்சனை ஏற்பட்டு அவருக்கு வேலை போகிறது. பின் மீண்டும் மன்னிப்பு கேட்டு வேலையில் சேர முயலும் போது மனைவியை பற்றி தவறாக பேசி முதலாளிகள் கூட்டத்தை அவமதித்து விட்டுச் செல்கிறார்.

இதற்கு பழி வாங்குவதற்காக போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கும் தொழிலாளியின் மனைவி பூமியை சாதிவெறிக் கும்பல் கொடூரமாக தாக்கி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்கிறது. பின் பொன்னியின் கணவர் மற்றும் அவரின் பெண் குழந்தை வீட்டுக்குள் இருக்கும் பொழுது குடிசைக்கு தீ வைத்து எரித்து விடுகிறார்கள். இதையடுத்து பொன்னி தனது குடும்பத்தை அழித்து தன்னையும் நாசம் செய்த கும்பலை எப்படி பழிவாங்குகிறார் என்பதே சாணிக் காகிதம். படத்தில் கீர்த்தி சுரேஷும் செல்வராகவனும் தனது நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

Categories

Tech |