Categories
சினிமா தமிழ் சினிமா

கீர்த்தி சுரேஷுக்கு திருமணமா….? கோவிலில் குடும்பத்தோடு சாமி தரிசனம்…. லீக்கான புகைப்படம்…!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான கீதாஞ்சலி என்னும் படத்தின் மூலமாக அறிமுகமானார். இவர் நடிப்பை விட பேஷனில் அதிக ஆர்வமும், ஈர்ப்பும் கொண்டிருந்தார். இந்த நிலையில் அவர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் குடும்பத்தினர் பார்த்த மாப்பிள்ளைக்கு ஓகே சொல்லியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி கீர்த்தி சுரேஷ் தொழிலதிபர் ஒருவரை விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மஞ்சள் நிற சுடிதார் அணிந்தபடி கீர்த்தி சுரேஷ் கோவிலில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று வைரலானது. கீர்த்தியின் பாட்டி சரோஜாவின் வீடு நெல்லை மாவட்டம், திருக்குறுங்குடியில் இருக்கிறது. திருமண ஏற்பாடுகள் நடப்பதால் அங்குள்ள பெருமாள் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று கீர்த்தி சிறப்பு தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.

Categories

Tech |