Categories
சினிமா தமிழ் சினிமா

“கீர்த்திக்கு என்னதான் ஆச்சு….?” கவலையில் ரசிகாஸ்….!!!!!

நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ். இவர் குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிடோருடன் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். அதன் பிறகு தெலுங்கில் சென்ற 2018 ஆம் வருடம் வெளியான மகாநதி படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார்.

அதனை தொடர்ந்து அண்மையில் இவர் நடிப்பில் வெளியான சாணிக் காயிதம் மற்றும் சர்காரு வாரி பாட்டா படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவர் இணைய தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். அவ்வபோது சில புகைப்படங்களையும் வெளியிடுவார்.

இந்த நிலையில் மாடல் உடையில் இருக்கும் புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டார். அதைப் பார்த்த ரசிகர்கள் கண்ணீர் விடுவது போன்ற எமோஜியை பதிவிட்டார்கள். இது குறித்து ரசிகர்கள் கூறியுள்ளதாவது, பூசினாற் போன்று அழகாக இருந்த எங்கே கீர்த்தி கிடையாது இது. இப்படி எலும்பும் தோலுமாக இருக்கின்றீர்களே? இதை அழகு என யார் கூறியது? இனியும் எங்களால் முடியாது. தயவு செய்து வெயிட் போடுங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார்கள். ஆனால் மீண்டும் வெயிட் போடும் ஐடியா கீர்த்திக்கு இல்லவே இல்லையாம் குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |