தமிழ்நாடு பா.ஜ.கவின் ஆதரவு பெற்ற கிசோர் கே.சுவாமி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாஜகவின் ஆதரவாளர் கிஷோர் கே சாமி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது . முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும், முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆகியோரை இழிவாக பேசி கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் பெண் பத்திரிக்கையாளர்களை பற்றிய ஆபாச கருத்துக்களை வெளியிட்ட புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கே. சாமியை இரண்டாவது முறையாக கைது செய்துள்ளனர்.
அதைத்தொடர்ந்து நடிகை ரோகினியும் அவர் மீது புகார் அளித்துள்ளார். இதனால் அவர் பெயரில் 14 புகார்கள் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் குண்டர் சட்டத்தில் அடைக்க காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். குண்டர் சட்டத்தில் கைது செய்யபடுபவர்களுக்கு ஓராண்டுக்கு பிணையில் வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.