Categories
சினிமா தமிழ் சினிமா

கிளாமர் லுக்குக்கு ஷிப்ட் ஆன நடிகை கீர்த்தி சுரேஷ்… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.. ஃபயர் விடும் ரசிகர்கள்…!!!!!

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ். 2000 வருடத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் 2013 ஆம் வருடத்தில் கீதாஞ்சலி என்னும் மலையாள திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகம் ஆகியுள்ளார். இதனை தொடர்ந்து இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இதனை அடுத்து தமிழில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக கமர்சியல் படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷுக்கு மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி திரைப்படம் திருப்புமுனையாக அமைந்துள்ளது.

 

 

 

மகாநதி படத்தில் தத்ரூபமான நடிப்பை நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.  இதனை அடுத்து கமர்சியல் படங்களுடன் தனி கதாநாயகியாக நடித்த மிஸ் இந்தியா, பென்குயின், சாணிக்காயுதம் போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதன் காரணமாக கமர்சியல் படங்களில் மட்டுமே மீண்டும் கவனம் செலுத்த முடிவு செய்திருப்பதாக தெரிகின்றது. இந்த நிலையில் அதன் ஒரு பகுதியாக தனது கிளாமர் புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இதனை அடுத்து அவரது புகைப்படத்திற்கு ரசிகர்கள் ஃபயர் விட்டு வருகின்றார்கள். தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக மாமன்னன் என்னும் திரைப்படத்திலும் தெலுங்கில் நானிக்கு ஜோடியாக தசரா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

Categories

Tech |