நடிகர் ஆதியின் கிளாப் திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரின் நடிப்பை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வருகின்றார் ஆதி. இவர் தற்போது கிளாப் திரைப்படத்தில் நடித்து இருக்கின்றார். இத்திரைப்படம் சோனி லைவ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஆதியின் நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தில் விளையாட்டு வீரனாக தோல்வி, குடும்பஸ்தன், தடைகளை கடக்கும் பயிற்சியாளர் என பல திறமைமிகு நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டை பெற்றுள்ளார் ஆதி.
இந்த படத்தை பிரித்வி ஆதித்யா இயக்கியுள்ளார். மேலும் ஐபி கார்த்திகேயன் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். படத்தின் வரவேற்பை தொடர்ந்து ஆதியின் திரைத்துறை நண்பர்கள் படம் பார்க்க ஆசைப்பட்டு உள்ளார்கள். இதற்காக ஆதி தனி காட்சியை பதிவு செய்து நிறைய நண்பர்களை பார்க்க வைத்துள்ளார். இத்திரைப்படத்தை பார்த்த அனைவரும் ஆதியின் நடிப்பை பாராட்டி வருகின்றனர் குறிப்பிடத்தக்கது.