சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வெங்கடாம்பட்டி பகுதியில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் 30 மூட்டைகளில் 1050 கிலோ ரேஷன் அரிசியை கடத்தியது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து லாரி ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையில் அவர் கீழபாப்பாகுடி பகுதியில் வசிக்கும் சிவகுமார் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சிவகுமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.