கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறிய சிறுமியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சில் உள்ள Limey என்ற பகுதியில் வசிக்கும் 8 வயது சிறுமி ஒருவர் கடந்த வியாழக்கிழமை அன்று தன் வீட்டிற்கு அருகில் வசிக்கும் 38 வயதுடைய பெண் ஒருவருக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து கூற சென்றுள்ளார். அப்போது வீட்டிற்கு சென்று கிறிஸ்மஸ் வாழ்த்து கூறிய சிறுமியை அந்த பெண் சிறிதும் இரக்கமின்றி கத்தியால் கொடூரமாக குத்தியுள்ளார். மேலும் இந்த சிறுமியுடன் சேர்ந்து நாலு வயது சிறுவனும் வாழ்த்து கூற சென்றுள்ளான். அச்சிறுவனையும் அப்பெண் கடுமையாக தாக்கியிருக்கிறார். இதில் அச்சிறுமி அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடனடியாக சிறுவனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் உயிரிழந்த சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து அந்தப் பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் மேலும் அவரிடம் விசாரித்து வருகின்றனர். கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறிய சிறுவன் சிறுமியை தாக்கியது எதற்காக? இதில் என்ன தவறு இருக்கிறது? மேலும் வேறு ஏதும் காரணமா? என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.