வருடம் தோறும் டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி இயேசு கிறிஸ்துவின் இறப்பை கொண்டாடும் விதமாக கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று பரவல் காரணமாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கிறிஸ்தவர்களாக சிறப்பாக கொண்டாட முடியாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு நிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில் இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உலக தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் அமெரிக்க அதிபர் பைடன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, “பண்டிகை கால கொண்டாட்டங்களின் போது ஒவ்வொருவரும் தங்களது குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் நேரம் செலவிட முடியும் என நானும் ஜில்லும் நம்புகிறோம். மேலும் எங்களது குடும்பத்தில் இருந்து உங்களுக்கு நான் அமைதியான கிறிஸ்துமஸ் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்” என பதிவிட்டுள்ளார். அதேபோல் கன்னட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் போப் பிரான்சிஸ் உள்ளிட்ட உலக தலைவர்கள் அனைவரும் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.