கேரளாவில் உள்ள ஒரு தேவாலயம் கிறிஸ்தவர்கள் அனைவரும் பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.
கேரளாவில் 1000ம் ஆண்டு பழமையான செயின்ட் ஜார்ஜ் ஆர்த்தோடக்ஸ் தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 47 சுவர் ஓவியங்கள் உள்ளன. மேலும் அப்பகுதியில் சாலை விரிவாக்கம் பணி நடைபெறும் போது சாலையோரம் உள்ள இந்த தேவாலயத்தை இடிக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தேவாலய நிர்வாகம் இதற்காக பல்வேறு அரசியல் கட்சியினரிடம் உதவி கேட்டுள்ளது. ஆனால் எந்த கட்சியும் நடவடிக்கை எடுக்கவில்லை .இந்நிலையில் பாஜக மூத்த தலைவரான பாலசங்கர் இந்த பிரச்சனையில் தலையிட்டு தேவாலயத்தை இடிக்க விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளார்.
மேலும் இது ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்பதை இந்திய தொல்பொருள் ஆராய்ச்சித் துறையினர் மூலம் பார்வையிட்டு அதற்கான சான்றிதழையும் வாங்கிக் கொடுத்துள்ளார். இதுகுறித்து தேவாலயத்தைச் சேர்ந்த செய்தி தொடர்பாளர் ஜான் ஆப்ரஹாம் கூறுகையில் “இந்த தேவாலயத்தை ஆபத்திலிருந்து காப்பாற்றிய பாலசங்கருக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். மேலும் வரும் சட்டப்பேரவை தேர்தலில் செங்கனூர் தொகுதியில்போட்டியிடும் அவருக்குத்தான் எங்கள் ஒட்டு. மேலும் கிறிஸ்தவர்கள் அனைவரும் அவருக்கு தான் வாக்களிக்க வேண்டும் அப்படி நாம் வாக்களிக்காமல் போனால் நன்றி மறந்தவர்கள் ஆகிவிடுவோம் “என்று கூறியுள்ளார்.