மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கரம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சங்கரம்மாள் தனது வீட்டு கிரைண்டரில் மாவு அரைக்க முயற்சி செய்துள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சங்கரம்மாளை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே சங்கரம்மாள் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.