Categories
தேசிய செய்திகள்

கிரெடிட் கார்ட் பில்கள்…. தில்லுமுல்லுக்களைக் கண்டறிவது எப்படி?…. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க….!!!

கிரெடிட் கார்டுகளில் இருக்கும் பிழைகளை எப்படி கண்டறிவது என்பதை பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம்.

பெரும்பாலான மக்கள் தற்போது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். நீங்கள் கிரெடிட் கார்டு பயனர் எனில் உங்களுக்கு ஒவ்வொரு பில்டிங் காலத்தின் முடிவிலும் கிரெடிட் கார்டு பில்லை பெற முடியும். உங்களது கிரெடிட் கார்டு பில்லில் பிழை இருக்கலாம். அப்படி பிழை இருக்கும் பட்சத்தில் நீங்கள் அதிகமாக பணம் செலுத்த வேண்டி இருக்கும். தேவையில்லாமல் நிதி சிக்கல் ஏற்படும். உங்கள் கிரெடிட் கார்டு பில்லில் உள்ள பிழைகளை தவிர்ப்பது எப்படி என்பதை இதில் பார்ப்போம். கிரெடிட் கார்டு பில் நீங்கள் சரிபார்க்க வேண்டிய முக்கியமான புள்ளிகள் தெரியாமல் பிழைகளை கண்டறிய முடியாது.

முதலில் கிரெடிட் கார்டு பில்லில் முகவரி, உங்கள் பெயர், கார்டு வரம்பு , பயன்படுத்தப்பட்ட வரம்பு, கடைசி பணம், நிலுவை தேதி, குறைந்தபட்ச தொகை,அனைத்துப் பரிவர்த்தனைகள் மேற்கொண்ட தேதி, தொகை போன்றவற்றை கட்டாயமாக சரி பார்க்க வேண்டும் . அதில் முக்கியமாக தவறாமல் உங்கள் கிரெடிட் கார்டு பில்களை சரி பார்ப்பது மிகவும் அவசியம். நீங்கள் உபயோகிக்கும் கிரெடிட் கார்டு நிறுவனம் உங்களுக்கு எந்த வகையான கட்டணங்களை உங்களிடம் வசூல் செய்கிறது என்பதை சரி பார்க்க வேண்டும்.

மிகவும் முக்கியமானது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை படிக்க வேண்டும். உங்களுக்கு கிரெடிட் கார்டு ரிப்போர்ட்டுடன் உள்ள கார்டு விவரங்களை சரி பார்க்க வேண்டும். இதெல்லாம் பார்க்கத் தலை சுற்றுமே என்று நினைத்தால் நீங்கள் உபயோகிக்கும் பணத்தை விட அதிகமாக செலுத்த வேண்டி வரும். இதெல்லாம் படித்து வைத்து தொடர்ச்சியான சரிபார்ப்புகள் மூலம் அதிகப்படியான பணத்தை செலுத்துவதை நாம் தவிர்க்கலாம்.

Categories

Tech |