சென்னை கிரீன்வேஸ் சாலையில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு ஆட்சியில் இருந்தது. தற்போது சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதனால் அரசு பங்களாவை அங்கிருந்து அமைச்சர்கள் உடனே காலி செய்ய வேண்டும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் தங்கியிருந்த எடப்பாடி பழனிசாமி, அங்கேயே தங்க கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் எடப்பாடி பழனிசாமி தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் பங்களாவை காலி செய்வதற்கு பன்னீர்செல்வம் அவகாசம் கேட்டுள்ளார். தனது தம்பி மறைவால் முழுமையாக பங்களாவை காலி செய்ய முடியவில்லை என்று கூறிய அவகாசம் கேட்டு இருக்கிறார். மேலும் மற்ற அமைச்சர்கள் வீட்டை காலி செய்து உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி பங்களாவில் தொடர்ந்து தங்க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அனுமதி அளித்துள்ளது.