Categories
உலக செய்திகள்

கிரிமியா குண்டுவெடிப்புகளால்…. ரஷ்யா பெரும் சோகம்…. தகவல் வெளியிட்ட பிரபல நாட்டு உளவுத்துறை….!!

கிரிமியா குண்டுவெடிப்புகளால் ரஷ்யா கவலை அடைந்துள்ளதாக இங்கிலாந்து உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

உக்ரைன் நாட்டில் ஒரு பகுதியாக விளங்கிய கிரிமியாவை ரஷ்ய ஆக்கிரமித்துள்ளது. அங்குள்ள ரஷ்யாவின் ஆயுதக்கிடங்கு, நேற்று முன்தினம் குண்டுவெடிப்புகளால் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால் அந்தப் பகுதியை சேர்ந்த 3 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீதான போர் 6-வது மாதங்களாக தொடர்ந்து நீடிக்கும்  நிலையில் கிரிமியாவில் உள்ள ரஷ்யாவின் ஆயுதக்கிடங்கில் நடந்த குண்டுவெடிப்புகள் அதிர வைத்துள்ளன. இந்த குண்டுவெடிப்புகளில் சதி வேலை நடந்திருப்பதாக ரஷ்யா கருதுகின்றது. மேலும் இது அந்த நாட்டை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து நேற்று இங்கிலாந்து ராணுவ உளவுத்துறை  வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, “ஆக்கிரமிப்புக்கு பின்னர் ரஷ்யாவின் தளமாக செயல்படுகிற கிரிமியா முழுவதும் பாதுகாப்பு நிலைமை மோசமாகி இருப்பது குறித்து ரஷ்ய தளபதிகள் அதிகளவில் கவலைப்படுவார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்புகளை நாசவேலை என்று ரஷ்யாவே ஒப்புக்கொண்டுள்ளது. இந்நிலையில், கிரிமியாவில் ஜான்கோய்க்கு அருகே அமைந்துள்ள கிடங்கில் வெடிப்புகள் நேற்றும் தொடர்ந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

Categories

Tech |