வாலிபரை கொலை செய்த எலக்ட்ரீஷனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் அடுத்துள்ள ரோஷனை காந்திநகரை சேர்ந்த சரவணன் என்பவருக்கும் எலக்ட்ரிஷன் அன்பழகன் என்பவருக்கும் கிரிக்கெட் விளையாட்டின் பொழுது தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் சென்ற 2017 ஆம் வருடம் சரவணன் அணிக்கும் அன்பு அணிக்கும் இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்ற பொழுது அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதில் ராதாகிருஷ்ணன், லோகேஷ், சதீஷ், மணிகண்டன், முத்தரசன், பாலாஜி, முருகன், செந்தில், ரங்கநாதன் உள்ளிட்டோருடன் திண்டிவனம் சந்தைமேடு தனியார் பள்ளி எதிரே அமைக்கப்பட்டுவரும் பைபாஸ் சேலையில் சரவணன் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரை அன்பு வழிமறித்து கத்தியால் குத்தி கொலை செய்து இருக்கின்றார்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அன்புவை கைது செய்தார்கள். இது குறித்த விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அன்புக்கு ஆயுள் தண்டனையும் ஒரு லட்சத்து 5 ஆயிரம் அபராதமும் கட்ட தவறினால் ஆறு மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் அபராத தொகையில் ஒரு லட்சத்தை பாதிக்கப்பட்ட சரவணன் குடும்பத்திற்கு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.