சுவை அதிகம் உள்ள கிராமத்து மீன் குழம்பு செய்வதை பற்றி அறிவோம்..!தேவையான பொருட்கள்:
தக்காளி – 2
சின்ன வெங்காயம் – 15
புளி – 2 எலுமிச்சை அளவு
பூண்டு – 1 முழுசு
கறிவேப்பிலை – சிறிதளவு
தேங்காய் – ஒரு கப்
நல்ல எண்ணெய் – 5 டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி – அரை டீஸ்பூன்
மல்லி பொடி – 1, 1/2 டீஸ்பூன்
வத்தல் பொடி -1, 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2டீஸ்பூன்
செய்முறை :
வாணலியில் நல்ல எண்ணெய் ஊற்றி சூடானதும் வெந்தயம் போட்டு பொரிய விடுங்கள் பொறிந்ததும் கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், பூண்டு போட்டு வதக்குங்கள், வதங்கிய பின்னர் தக்காளி, வத்தல் 2 போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
பிறகு மீன் போட்டு லேசாக கிளறி விட வேண்டும். கரைத்து வைத்திருக்கும் புளி கரைசல் அதோட வத்தல் பொடி, மஞ்சள்பொடி, மல்லி பொடிஉம சேர்த்து கரைசலாக வைத்திருக்க வேண்டும். அந்த கரைசலை மீன் போட்டு லேசாக கிளறி உடன் ஊற்ற வேண்டும். இல்லையென்றால் மீன் அனைத்தும் உடைந்து விடும்.
தேங்காய், சின்ன வெங்காயம், சீரகம் அரைத்து வைத்திருக்க வேண்டும். அந்த கலவையும் சேர்த்து சிறிதளவு உப்பு போட்டு கொதிக்க விட வேண்டும்..மிதமான சூட்டில் கொதிக்க வையுங்கள், அப்பொழுதான் மீன் நன்கு வெந்து மசாலா ருசி ஒன்று சேரும்.. இப்பொழுது கிராமத்து மீன் குழம்பு ரெடி..!