வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் என்ன செய்தாலும் அது சர்வதேச அளவில் பேசும் பொருளாகவும், வித்தியாசமானதாகவும் மாறுகிறது. அதாவது அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் துணிச்சல், அணு ஆயுத சோதனை செய்யும் தைரியம், வடகொரியாவில் அவர் விதிக்கும் கட்டுப்பாடுகள் உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைக்கிறது. தற்போது 79 வயதான பிரபல வடகொரிய செய்தி தொகுப்பாளருக்கு கிம் ஜாங் உன் அளித்துள்ள பரிசு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
அதாவது வடகொரியாவில் பிரபல செய்தி தொகுப்பாளர்களில் ஒருவரான ரி சுன் ஹி (வயது 79), கிம் ஜாங் உன் தாத்தா கிம் ஜோங் ஜு இறப்பிற்கு கண்ணீர் மல்க செய்தி வாசித்துள்ளார். அதேபோல் வடகொரியாவில் முதல் முறையாக அணு ஆயுத சோதனை நடத்திய போது அதனை உலகிற்கு எடுத்து கூறியிருக்கிறார். இதனால் கிம் ஜாங் உன், ரி சுன் ஹிக்கு ஆடம்பர வீடு ஒன்றை பரிசாக அளித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் இதுபோன்ற ஒரு சில நல்ல விஷயங்களையும் கிம் ஜாங் உன் தன் நாட்டு மக்களுக்கு செய்து வருகிறார்.