தாயும், குழந்தையும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள மாசிநாயக்கன்பட்டி இந்திரா நகரில் டிராவல்ஸ் உரிமையாளரான வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சுபஸ்ரீ(1) என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் வினோத் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார். நேற்று மீனா தோட்டத்து கிணற்றுக்கு அருகே நின்று தனது குழந்தைக்கு சாப்பாடு கொடுத்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் மோட்டாரை இயக்குவதற்காக மீனா குழந்தையை அங்கேயே விட்டு சென்றுள்ளார். அப்போது விளையாடிக் கொண்டிருந்த குழந்தை எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மீனா தனது குழந்தையை காப்பாற்றுவதற்காக கிணற்றுக்குள் குதித்த போது தண்ணீரில் மூழ்கினார். குழந்தையும் தண்ணீரில் மூழ்கி இறந்தது. இதனையடுத்து குடும்பத்தினர் மீனாவையும், குழந்தையும் தேடி வந்தனர்.
அப்போது கிணற்றுக்குள் செருப்பு மிகுப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு வரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தாய் மற்றும் குழந்தையின் உடலை மீட்டனர். பின்னர் தாய் மற்றும் குழந்தையின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.