Categories
தேசிய செய்திகள்

கிணற்றுக்குள் கிடந்த கல்லூரி மாணவி பிணம்…. நீடிக்கும் மர்மம்…. அதிர்ச்சியில் உறவினர்கள்…!!!

கல்லூரி மாணவி ஒருவர் கிணற்றுக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து திருச்சூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளா மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டம் இரிஞ்ஞாலகுடா என்ற பகுதியை சேர்ந்தவர் ஜோதி பிரகாஷ். இவருடைய மகள் சந்தியா (19). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று காலையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சந்தியாவை காணவில்லை.

உடனே இதனை அறிந்த உறவினர்கள் சந்தியாவை அக்கம் பக்கம் எல்லா இடத்திலும் தேடி வந்துள்ளனர். ஆனால் அவர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.இந்நிலையில் சந்தியா வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு உடனே வந்து கிணற்றுக்குள் கிடந்த மாணவியின் உடலை மீட்டனர். மாணவியின் இந்த மர்மமான இறப்பு குறித்து காரணம் தெரியவில்லை. இதனால் இச்சம்பவம் குறித்து திருச்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |