Categories
மாவட்ட செய்திகள்

“கிணற்றில் தவறி விழுந்த யானை உயிரிழப்பு”… கொளத்தூர் அருகே நடந்த சோகம்…!!!!

கொளத்தூர் அருகே விவசாய கிணற்றில் யானை மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

தமிழக கர்நாடக எல்லையான சேலம் மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் அடுத்த லக்கம்பட்டி வனப்பகுதியில் உள்ள கிராமத்தில் திறந்தவெளிக் கிணறுகள் தோண்டப்பட்ட விவசாய பணிகள் நடந்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவு 15 வயதுடைய ஆண் யானை ஒன்று உணவு தேடி வந்து கொண்டிருக்கும் பொழுது கிணற்றின் அருகில் சென்றுள்ளது. எதிர்பாராத விதமாக திடீரென அந்த யானை கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் தத்தளித்த நிலையில் மூழ்கி உயிரிழந்துள்ளது.

நேற்று காலையில் மக்கள் அங்கு சென்றபொழுது கிணற்றுக்கு அருகே யானை சறுக்கி விழுந்த தடயங்கள் இருந்ததால் மேட்டூரில் உள்ள வனத்துறை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர், தீயணைப்புத்துறையினர் உள்ளிட்டோர் வந்து மூழ்கியுள்ள யானையை பொது மக்களின் உதவியோடு மீட்கும் பணியில் 8 மணி நேரம் ஈடுபட்டது. பிறகு யானையை அங்கிருந்து எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்தனர். இச்சம்பவம் அங்குள்ள பொதுமக்களைகிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வனப்பகுதியில் இருந்து யானைகள் வெளியே வராமல் இருக்க அகழிகள் வெட்டப்பட்டு வருகின்ற நிலையில் அப்பகுதியில் அமைக்கப்படாததால் யானை வெளியே வந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |