புகலூர் நாடார் தெரு பகுதியை சேர்ந்த சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி. இவருக்கு சொந்தமான ஆடுகள் அந்த பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக தோட்டத்தின் அருகே மேய்ந்து கொண்டிருந்த ஆடு ஒன்று அங்குள்ள 50 அடி ஆழம் உள்ள கிணற்றில் தவறி விழுந்தது.
அதை பார்த்த விஜயலட்சுமி அக்கம்பக்கத்தினரை அழைத்து ஆட்டை மீட்க சொல்லி கேட்டுள்ளார். இருப்பினும் மீட்க முடியவில்லை. இது பற்றி தகவல் அறிந்த வேலாயுதம் பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கயிறு கட்டி இறக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆட்டை பத்திரமாக மீட்டர் அதன் பின் ஆடு விஜயலட்சுமியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.