வேறொரு நபருடன் பேசி கொண்டிருந்த பெண்ணை கள்ளக்காதலன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பெரியகுக்குண்டி பகுதியில் உள்ள ஜெய்சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 30-ஆம் தேதி தகரகுப்பம் பகுதியில் இருக்கும் தாய் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு மகேஸ்வரி சென்றுள்ளார். ஆனால் மகேஸ்வரி அங்கு செல்லவில்லை. இதனால் மகேஸ்வரியின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அப்போது பெரியகுக்குண்டி பகுதியில் இருக்கும் விவசாய கிணற்றில் மகேஸ்வரி சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மகேஸ்வரியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது. அதாவது கடந்த 6 ஆண்டுகளாக மகேஸ்வரிக்கு அதே பகுதியில் வசிக்கும் பிரபு என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. கடந்த 1 1/2 வருடங்களுக்கு முன்பு பிரபுவிற்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இதற்கிடையில் கட்டிட வேலை பார்க்கும் அருண் என்பவருடன் மகேஸ்வரிக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 30-ஆம் தேதி அப்பகுதியில் இருக்கும் விவசாய கிணறு அருகே நின்று கொண்டு மகேஸ்வரி அருணுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த பிரபு மகேஸ்வரியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் கோபமடைந்த பிரபு மகேஸ்வரியின் தலையில் கல்லால் அடித்து அவரை கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனை அடுத்து பிரபுவை காவல்துறையினர் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.