Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“கிணத்துக்கடவு மேம்பாலத்தில் சரிவர எரியாத மின் விளக்குகள்”… மக்கள் அவதி… நடவடிக்கை எடுக்க கோரிக்கை…!!!

கிணத்துக்கடவு மேம்பாலத்தின் கீழ் மின்விளக்குகள் சரிவர எரியாததால் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

கோவை-பொள்ளாச்சி இடையேயான மெயின் ரோட்டில் கிணத்துக்கடவு இருக்கின்றது. அதை சுற்றி நிறைய கிராமங்கள் இருக்கின்றன. அங்கு செல்லும் கிராம மக்கள் கிணத்துக்கடவு இறங்கி தான் அவர்கள் கிராமத்திற்கு செல்வார்கள். இதனால் கிணத்துக்கடவு ரோட்டில் எப்போதும் ஆள் நடமாட்டம் அதிகமாக இருந்து கொண்டே இருக்கும்.

இந்நிலையில் சென்ற சில வருடங்களுக்கு முன்பாக கோவையிலிருந்து கிணத்துக்கடவு வழியாகச் செல்லும் சாலை நான்கு வழி சாலையாக மாற்றப்பட்டு அதையொட்டி கிணத்துக்கடவு ஊருக்குள் மேம்பாலம் கட்டப்பட்டது. அந்த மேம்பாலத்தில் 60க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கப்பட்டு ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகளுக்காக 300க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் பொருத்தப்பட்டது.

இந்த மின் விளக்குகளானது மாலை 06.30 மணி தொடங்கி காலை 6 மணி வரை எரியும். ஆனால் தற்போது பெரும்பாலான மின்விளக்குகள் சரிவர ஒளிர்வதில்லை. இதனால் அங்கு அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றது. வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் பொதுமக்கள் என பலரும் பாதிக்கப்படுகிறார்கள்.

இதனால் அந்த பகுதி மக்கள் இதுதொடர்பாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளார்கள். ஆனால் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மாவட்டம் நிர்வாகம் தலையிட்டு மின் விளக்குகள் ஒளிர்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் முதலமைச்சருக்கும் மாவட்ட கலெக்டருக்கும் புகார் மனு அனுப்ப இருப்பதாக பொதுமக்கள் கூறியுள்ளார்கள்.

Categories

Tech |