Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்….. வேட்டை நாய்களுடன் சிக்கிய நபர்கள்…. வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

வன விலங்குகளை வேட்டையாடிய குற்றத்திற்காக 8 பேரிடம் இருந்து வனத்துறையினர் 1 லட்ச ரூபாய் அபராதம் வசூலித்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காவலப்பட்டி அருகில் இருக்கும் வனப்பகுதியில் மர்ம கும்பல் ஒன்று வன விலங்குகளை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி தன்னாசியப்பன் கோவில் பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நாய்களுடன் சுற்றித்திரிந்த 2 பேரை வனத்துறையினர் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த விசாரணையில் அவர்கள் காவலப்பட்டி பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி, தங்கவேல், கணேசன், முருகன், அருள், செல்வன், பாலன், கிருஷ்ணன் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் நாய்களை பயன்படுத்தி வன விலங்குகளை தொடர்ந்து வேட்டையாடி வந்துள்ளனர். இதனால் முருகன் உள்பட 8 பேருக்கு தலா 12 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்து வனத்துறையினர் 1 லட்ச ரூபாய் வசூலித்தனர். மேலும் வேட்டைக்குப் பயன்படுத்திய நாய்களை மீட்டு பழனியில் இருக்கும் விலங்குகள் நல அமைப்பிடம் வனத்துறையினர் ஒப்படைத்தனர்.

Categories

Tech |