சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சாணார்பட்டி அருகே கொசவபட்டி பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் மறைத்து வைத்திருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இவருடைய உத்தரவின் பேரில் தனிப்படை காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு குடோனில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
அதில் மொத்தம் 480 கிலோ இருந்தது. இதனையடுத்து குடோனில் இருந்த அமுதா, அலெக்ஸ், சத்யா, மணிகண்டன் ஆகிய 4 பேரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பெங்களூரில் இருந்து கார் மூலமாக புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. இவர்களின் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 4 பேரையும் கைது செய்துள்ளனர்.