சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள வாலாஜாபேட்டை பாலாறு அணைக்கட்டு இலங்கை அகதிகள் முகாமில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தன் என்ற மகன் உள்ளார். இவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் இருக்கும் பெட்ரோல் பங்க் அருகில் நின்று கொண்டிருந்த சாந்தனை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவரிடம் இருந்த 200 கிராம் கஞ்சா பொட்டலத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சாந்தனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.