சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி கரியாலூர் சப்- இன்ஸ்பெக்டர் துரை தலைமையிலான ஒரு குழு கல்வராயன்மலை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்துள்ளனர்.
அந்த விசாரணையில் அருவங்காடு கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பது தெரியவந்தது. இவர் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் சக்திவேலை கைது செய்து அவரிடமிருந்த 1 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.