சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக 16 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் சிலர் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்நிலையில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக பாபு, முனிராஜ், சந்தோஷ், நாகராஜ், சேகர் உட்பட 16 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணம், 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 16 செல்போன்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.