கஞ்சா பதுக்கி வைத்திருந்த மாணவர்கள் உள்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோமையார்புரம் பகுதியில் சிலர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தேகப்படும்படியாக நின்ற நான்கு பேரை சுற்றி வளைத்தனர். இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் இறச்சகுளம் ராஜீவ் நகர் பகுதியில் வசிக்கும் கணேஷ்(20), பாலிடெக்னிக் மாணவர் தமிழரசன்(19), சக்தி(19) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.
அவர்களிடம் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது. மேலும் சுடுகாட்டு பகுதியில் 4 பேரும் இணைந்து கஞ்சா செடி வளர்ப்பதும் கணேஷ் ஏற்கனவே ஒரு கொலை வழக்கு தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிந்த போலீசார் நான்கு பேரையும் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.