வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கிய குற்றத்திற்காக பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அண்டர்காட்டில் ஈஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் மதுபாட்டில் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி காவல்துறையினர் ஈஸ்வரியின் வீட்டுக்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர்.
அந்த சோதனையில் அவரது வீட்டில் ரூ. 3,00,000 மதிப்பிலான மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஈஸ்வரி மீது வழக்கு பதிந்த காவல்துறையினர் மதுபாட்டில்களை பதுக்கிய குற்றத்திற்காக அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.