அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கீழ தாயில்பட்டி, கோட்டையூர், பசும்பொன் நகர், தாயில்பட்டி, விஜயகரிசல்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி குடியிருப்புகளில் பட்டாசு தயாரிக்கப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி இன்ஸ்பெக்டர் ஜோதி ராஜ், வெற்றி முருகன் ஆகியோர் அந்தப் பகுதிகளுக்கு சோதனை செய்தனர்.
அந்த சோதனையில் மாதவன், முனீஸ்வரன், நல்லதம்பி, ராஜ்குமார் ஆகியோர் அனுமதியின்றி வீடுகளில் பட்டாசு தயார் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் 4 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த பட்டாசுகள் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.