Categories
சினிமா தமிழ் சினிமா

கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி சுரேஷ்… வெளியான தகவல்…!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் 25-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் அண்ணாத்த, சாணிக் காயிதம் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் அண்ணாத்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு தங்கையாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. வருகிற நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளிக்கு இந்த படம் தியேட்டர்களில் வெளியாக உள்ளது. நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் மட்டுமல்லாது பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார் ‌.

Exclusive: Keerthi Suresh's shocking reaction towards trolls -  TeluguBulletin.com

அதன்படி சர்காரு வாரி பாட்டா என்ற தெலுங்கு படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் ஒரு தெலுங்கு படத்திலும், மலையாள படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் நானி நடிப்பில் உருவாகவுள்ள தசரா படத்தில் கதாநாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷை  அணுகினர். இந்த படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் ரூ.3 கோடி சம்பளம் கேட்டுள்ளார். இவர் இதற்கு முந்தைய படங்களில் ரூ.2 கோடியிலிருந்து ரூ.2.5 கோடி வரை சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

Categories

Tech |