Categories
பல்சுவை

கா…. கா…. தந்தா பெருசா தா…. இல்லனா வேண்டாம்….. காக்காவின் லட்சியம்…. வெளியான காணொளி…!!

காக்கை ஒன்று மீன் கடைக்காரரை ஏமாற்றி சென்ற காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

கொக்கு ஓடு மீன் ஓட உறு மீன் வரும் என்று காத்திருப்பதை ஒற்றை வரியில் அவ்வையார் கூறியிருப்பார். ஆனால் தற்போது வெளியாகியிருக்கும் காணொளியில் கொக்கு மட்டுமில்லை காக்கையும் காத்திருக்கும் என்பது உறுதியாகியுள்ளது. அந்த காணொளியில் காகத்திற்கு மீன் கடை வைத்திருப்பவர் சிறிய மீன்களை கொடுக்கிறார். ஆனால் அது வாங்கி கீழே வைத்தது. பின்னர் அவர் பெரிய மீன் ஒன்றை கொடுத்ததும் காக்கை அதை வாங்கிக்கொண்டு எஸ்கேப் ஆகி விடுகிறது.

இந்த காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா பதிவிட்டு இருந்தார். புத்திசாலித்தனம் இல்லாத லட்சியம் பறவை இறகில்லாமல் இருப்பதற்கு சமம். இந்த காக்கை லட்சியம் மிக பெரியதாக இருக்கிறது என குறிப்பிட்டிருந்தார்.

Categories

Tech |