காஷ்மீரில் பனிச்சரிவு அபாயம் அதிகமாக இருப்பதால் தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் பயணிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் உள்ள நான்கு மாவட்டங்களில் கடுமையான பனிச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக யூனியன் பிரதேச அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் பலத்த பனிப்பொழிவு இருக்கிறது. அதனால் வடக்கு காஷ்மீரின் குப்வாரா, பந்தி போரா, பாரமுல்லா மற்றும் வடக்கு காஷ்மீரின் கந்தெற்பால் ஆகிய மாவட்டங்களுக்கு பனிச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பனிச்சரிவு அபாயம் அதிகமாக இருப்பதால் ஜம்மு-காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் பயணிப்பதை பயணிகள் அடுத்த சில நாட்களுக்கு புறக்கணிக்க வேண்டும் என்று அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.