Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் அதிரடி வேட்டை….. 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை….. வெளியான தகவல்….!!!

பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் சமீபகாலமாகவே பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இவர்கள் இந்துக்கள் மற்றும் காஷ்மீரி பண்டிட்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் புல்வாமா மாவட்டம் திராப்கம் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது 3 தீவிரவாதிகள் அதிரடியாக சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த 3 தீவிரவாதிகளும் லஷ்கர் இ தொய்பா என்ற பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆவார். இந்த தகவலை காஷ்மீர் காவல்துறையினர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தனர்.

இந்த சம்பவம் குறித்து காஷ்மீர் ஐ.ஜி கூறியபோது, தீவிரவாதிகள் 3 பேரும் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் என்றும், அதில் ஒருவரின் அடையாளம் மட்டும் தெரிய வந்துள்ளது என்று கூறியுள்ளார். அந்த பயங்கரவாதி ஜுனைத் ஷீர்காஜிரி ஆவார். இவர் கடந்த மே மாதம் சுட்டுக்கொலை செய்யப்பட்ட ரியாஸ் அகமது என்ற காவலரின் கொலை வழக்கில் தொடர்புடையவர் ஆவார். அதன்பிறகு மற்ற 2 பேரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  மேலும் தொடர்ந்து தீவிரவாதிகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

Categories

Tech |