சன்ரைசர்ஸ் அணி காவியா மாறனை திட்டமிட்டு சுந்தர் வாஷிங்டன் ஏமாற்றியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் 15வது சீசன் ஏலம் கடந்த 13, 12 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் யாரை வாங்க வேண்டும், யாரை வாங்க கூடாது என்பதை காவ்யாமாறன் தீர்மானித்திருந்தார். இதனால் முன்கூட்டியே தேர்வு செய்து வைத்திருந்த வீரர்களை வாங்குவதில் அதிக தொகையை செலவிட தயாராக இருந்தார். அதிக தொகை கொடுத்து வாங்கியதில் நிக்கோலஸ் பூரன், எய்டன் மார்க்கரம் போன்றவர்கள்தான். அதில் தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தரின் பெயரும் இருந்தது.
இந்நிலையில் காவியா மாதவன், சுந்தரை விடாப்பிடியாக 8.25 கோடிக்கு தட்டி தூக்கி உள்ளார். பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் பங்களிப்பு செய்யக்கூடியவர் அதிலும் குறிப்பாக பவர் பிளேவில் பந்து வீசி விக்கெட்டுகளை நிறுத்தும் ஆற்றல் அவரிடம் இருக்கிறது. இதனால் நிர்வாகம் மகிழ்ச்சியாக இருந்த நிலையில் நேற்று இரவு திடீரென அதிர்ச்சிகரமான சம்பவம் நடைபெற்றது. அதாவது சுந்தர் காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால் டி20 தொடரில் பங்கேற்காமல் கொல்கத்தாவில் இருந்து புறப்பட்டு பெங்களூரில் தங்கி மூன்று வாரம் சிகிச்சை எடுப்பதாக பி.சி.சி.ஐ சார்பில் கூறப்பட்டது. இந்த செய்திதான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்வாகத்தை அதிர்ச்சியில் உள்ளது.
அதாவது வாஷிங்டன் சுந்தருக்கு ஏலத்திற்கு முன்பே காயம் இருந்ததாகவும் மேலும் அவர் ஏலத்தை கருத்தில் கொண்டுதான் மறைத்ததாகவும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர். காவ்யா மாறன் மற்றும் அவர்களது அணிக்கு இது கவலை இல்லை, ஒருவேளை காயத்தின் தன்மை அதிகரித்து அவர்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப முடியாமல் போனால், அது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என நினைத்துள்ளதாக கூறப்படுகிறது.