தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின்னர் பாஜ கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ஆர்.காந்தி, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், சி.சரஸ்வதி ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லி லோக் கல்யான் மார்க் பகுதியில் இருக்கும் அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து பேசினர். இதில் தமிழகம் தொடர்பான அனைத்து விவரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதையடுத்து பிரதமருடனான ஆலோசனைக்கு பின்னர் நிருபர்களை சந்தித்த மாநில தலைவர் எல்.முருகன் கூறியதாவது, காவிரி நீரை முறையாக சேமிக்காமல் தமிழகம் தான் அதனை வீணடித்து வருகிறது என தெரிவித்துள்ளார். கர்நாடகா நீர் பங்கீட்டு சரியாக தான் வழங்குகிறது. அதனை சேமிக்காமல் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக தமிழகத்திற்கு வரும் காவிரி நீர் வீணாக கடலில் கலந்துவிடுகிறது என்று அவர் கூறியுள்ளார்.