Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு…. ஒகேனக்கல் அருவியில் வெள்ளப்பெருக்கு…. பொதுமக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை….!!!

பொது மக்களுக்கு தண்டோரா மூலமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர் படிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதோடு கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜா சாகர் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.  இங்கிருந்து தண்ணீர் காவிரி பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்கு வருகிறது. இந்த அருவிக்கு வினாடிக்கு 1 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் சினிபால்ஸ், ஐந்தருவி மற்றும் மெயின் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ளப்பெருக்கினால் கரையோர பகுதிகளில் உள்ள வீடுகளிலும் தண்ணீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக வீடுகளில் இருந்து வெளியேறும்படி தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். அதன்பிறகு கரையோர மக்கள் சமுதாய நலக்கூடம் மற்றும் சத்துணவு மையங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது. மேலும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் யாரும் அருவியில் குளிக்க மற்றும் துணி துவைக்கக்கூடாது என தண்டோரா மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |