Categories
மாநில செய்திகள்

காவல் துறையில் நான்கு உயரதிகாரிகள்… தலைவர்கள் ஆகும் ஏடிஜிபி.கள்…!!!!

காவல்துறையில் உயர்ந்த பதவி டிஜிபி பதவி ஆகும். ஐபிஎஸ் அதிகாரிகள் ஏ.எஸ்.பியாக பதவியில் இணைந்து எஸ்.பி, டிஐஜி, ஐஜி, ஏடிஜிபி, டிஜிபி என 5 கட்ட பதவி உயர்வை பெறுகின்றனர். இந்நிலையில், கூடுதல் டிஜிபியாக இருந்த 4 ஐபிஎஸ் அதிகாரிகளை, டிஜிபியாக பதவி உயர்வு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தாம்பரம் காவல் ஆணையர் ரவிக்கு,  டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.அம்ரீஷ்  புஜாரி சைபர் கிரைம் பிரிவு டிஜிபியாகவும்,  ஜெயந்த்  முரளி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபியாகவும்  பதவி உயர்வு பெற்றுள்ளனர். ஆராய்ச்சி மேம்பாட்டு பிரிவில் இருக்கும் கருணா சாகரும்  டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

Categories

Tech |