Categories
உலக செய்திகள்

காவல்துறையில் பணியாற்றி வரும் 150 அதிகாரிகள் குற்றவாளிகளா ?வெளியான தகவல் ..!!எந்த நாட்டில் தெரியுமா ?

லண்டனில் காவல்துறையில் பணியாற்றி வரும் 150 அதிகாரிகள் குற்றவாளிகள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

காவல்துறையினரால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி லண்டன் நகரில் பணியாற்றி வருகின்ற 150 போலீஸ் அதிகாரிகள் பணியில் சேர்வதற்கு முன்பு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக அறிவித்துள்ளது. தற்போது 32,000 காவலர்கள் லண்டன் பெருநகர காவல்துறையில் பணியாற்றி வருகின்றனர் .சில போலீஸ் அதிகாரிகள் ஒன்றுக்கு மேற்பட்ட குற்றச்சாட்டுக்களில் குற்றவாளிகளாக  நிரூபிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. காவல் துறையை பொருத்தவரை கட்டாய நிராகரிப்புக்கு வழி வகுக்கும் சில தவறுகள் உள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்காட்லான்ட் யார்ட், அந்த தவறுகளில் கடுமையான வன்முறை அல்லது காயத்தை ஏற்படுத்துதல் ,போதைப் பொருட்களுடன் தீவிர ஈடுபாடு, நேர்மையற்ற தன்மை ,யாருக்கும் கடுமையான இழப்பு ஆகியவை கண்டறியப்பட்டால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது .

Categories

Tech |