Categories
மாநில செய்திகள்

காவலர் பணிக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு… வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!

புதுவையில் வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகளை தற்போது அரசு வெளியிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா  காரணமாக ஏராளமான இளைஞர்கள் தங்கள் வேலைவாய்ப்பை இழந்திருக்கின்றனர். தற்போது பாதிப்பு குறைந்துள்ள நிலையில் பல்வேறு வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது. இதனை தொடர்ந்து காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக கடந்த ஆண்டு இறுதியில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தமாக 437 காலிப் பணியிடங்கள் நிரப்ப உள்ளன. இத்தேர்வுக்கு  17, 627 பேர் விண்ணப்பித்தனர்.

இதில் தகுதியான 14, 787பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. இதில் நிர்வாக காரணங்களால் டெக்னீசியன் பிரிவுக்கு மட்டும் தற்காலிகமாக தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த எழுத்து தேர்வுக்கான அறிவிப்பு பற்றி புதுவை அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

காவலர் பணிக்கான எழுத்து தேர்வு வருகிற மார்ச் மாதம் 19 முதல்  காலை 10 மணி முதல் 12 வரை ஒரு பிரிவிற்கும், மதியம் 2 மணி முதல் 4 மணிவரை மற்றொரு பிரிவுக்கும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் இடம் மற்றும் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |