காவலர் நினைவு தினத்தை போற்றும் வகையில் டெல்லியில் உள்ள தேசிய காவலர் நினைவிடத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தியுள்ளார்.
காவல்துறை பணியில் இருக்கும்போது நாட்டின் பாதுகாப்பிற்காக, வீரதியாக செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவைப் போற்றக் கூடிய வகையில் அக்டோபர் 21ஆம் தேதி காவலர் வீரவணக்க நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்அந்த வகையில் வீரவணக்க தினத்தையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கின்ற காவலர் நினைவு சின்னங்களில் வீர வணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் சிலர் உயிர் தியாகம் செய்த காவலர்கள் அதே புகழாரம் சூட்டி சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
மேலும் உயிர்த் தியாகம் செய்த காவல்துறை அதிகாரிகளுக்கு அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் அனைவரும் வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் உள்ள தேசிய காவலர் நினைவிடத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியுள்ளார். இதனைப் போலவே அந்தந்த மாநில காவல் துறை சார்பாக காவலர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.