காவலர் நினைவு தினத்தை முன்னிட்டு உத்திரபிரதேசத்தில் பணியின் போது உயிரிழந்தவர்களுக்கு அந்த மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அஞ்சலி செலுத்தியுள்ளார். அதன் பின் நிகழ்ச்சியில் பேசிய அவர் நாட்டின் பாதுகாப்பை பேணுவதில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ராணுவம், துணை ராணுவம் மற்றும் காவல்துறை வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் தருணம் இது. கடந்த ஐந்து வருடங்களில் உத்தரப்பிரதேச போலீஸ் நடத்திய என்கவுண்டரில் 166 குற்றவாளிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர் மேலும் 4,453 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் காவலர்களின் குடும்ப நலன் மற்றும் அவர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தின் பாஜக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து காவல்துறையில் 22 ஆயிரம் பெண்கள் உட்பட 1,50,231 பேர் பணியமர்த்தப்பட்டு இருக்கின்றனர். 45,689 பணியிடங்களுக்கு ஆள் சேர்ப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆயுதப்படை காவலர்கள் தலைமையில் கான்ஸ்டபிள் மற்றும் கான்ஸ்டபில்களுக்கு தொலைபேசி உதவித்தொகை வருடத்திற்கு 2000 கூடுதலாக வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.